பெரு நிறுவனங்கள் மற்றும் பெரிய உணவகங்கள் பயன்பெறும் வகையில் 450 கிலோ எடையிலான எரிவாயு சிலிண்டரை "ஜம்போ சிலிண்டர்" என்ற பெயரில் இந்தியன் ஆயில் நிறுவனம் கோவையில் இன்று அறிமுகம் செய்தது.

பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 450 கிலோ எடையில் ஜம்போ என்ற பெயரில் பெரிய அளவிலான எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிலிண்டர் அறிமுக விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சிலிண்டரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் சித்தார்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்டேன் நிறுவனம் முதல் முறையாக அதிக எடை கொண்ட இந்த சிலிண்டரை அறிமுகம் செய்கிறது. இதன் விலை 24 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை பெற ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 64 சதுர அடி பரப்பளவில் இந்த சிலிண்டரை வைத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சிலிண்டர்களை விட இந்த சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. எரிவாயு கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் இதில் இருக்காது. எளிதாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஜம்போ சிலிண்டர் இன்று முதல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்யும். இது வரை இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த 44 லட்சத்து 43 ஆயிரத்து 667 வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மானியம் தேவையில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். நெல்லையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன சேமிப்பு கிடங்கு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளோம்" என தெரிவித்தார்.